India
முன்னாள் காதலனுடன் ரகசிய சந்திப்பு.. மாட்டிக்கொண்டதால் கணவர் செய்த செயல்.. அதிர்ந்த கிராமம் ! - பின்னணி ?
பீகார் மாநிலம் நவாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். கணவர், பிள்ளைகள் என குடும்பமாக அந்த பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கட்நத 3 நாட்களுக்கு முன்னர் இவர் தனது கணவர் வீட்டில் இல்லாத இரவு நேரத்தில் தனது முன்னாள் காதலனை ரகசியமாக சந்தித்துள்ளார்.
இருவரும் சந்தித்ததை அவர்கள் உறவினர்கள் தெரிந்துகொண்டனர். இதையடுத்து உறவினர்கள் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து வைத்தனர். வேலைக்கு சென்ற கணவருக்கு இந்த தகவல் தெரிந்ததும் பதறியடித்து வந்து பார்த்துள்ளார். அங்கே அவரது மனைவி மற்றும் அவரது முன்னாள் காதலனை உறவினர்கள், ஊர் மக்கள் பிடித்து வைத்திருந்தனர்.
இதையடுத்து இப்போதும், தனது மனைவி அவரது முன்னாள் காதலனுடன் வாழ ஆசைப்படுவதாக எண்ணிய கணவர் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எண்ணினார். அதன்படி அவர்களை சிவன் கோயில் ஒன்றுக்கு அழைத்த சென்று அங்கே வைத்து தனது மனைவியின் காதலனை, தனது மனைவிக்கு தாலி கட்ட வைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண் கதறி அழுதுகொண்டு இருக்கிறார். இருப்பினும் அவர்களது உறவினர்கள் அந்த பெண்ணுக்கு அவரது காதலனுடன் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கின்றனர். உடலில் இரத்த கோரங்களுடன் அந்த பெண்ணின் காதலனும், அவரது நெற்றியில் குங்குமம் வைத்து விடுகிறார். இதற்கு பலரும் பலவித கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது போல், அவரது முன்னாள் காதலனுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணின் கணவரும், அவரது காதலனுக்கே அவரை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த சம்பவத்தால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!