India
காதலியை பார்க்க ரகசியமாக வந்த இளைஞர்.. திருடன் என நினைத்து சிறுமியின் தந்தை உறவினர் செய்த கொடூரம் !
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கோடா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அவர் வேறொரு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 1 வருடமாக காதலித்து வந்த நிலையில், இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இந்த சிறுமியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை என்பதால், தனது காதலியை பார்க்க காதலன் வந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென சிறுமியின் தந்தை வரவே, அவர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இந்த இளைஞர் தப்பியோடுவதை கண்டதும் திருடன் தான் வந்துவிட்டாரோ என்று எண்ணி, அவர்கள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றனர்.
அப்போது அவரை பிடித்து அவர்கள் சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் தாக்குதலில் ஈடுப்பட்ட போது, அது இளைஞருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அவ்ர்கள் பார்க்கியில், இளைஞர் மயங்கி இருந்துள்ளார். பின்னர் அவரை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையின்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து இதனை கொலை வழக்காக பதிவு செய்த அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது அந்த இளைஞர் 15 வயது காதலியை சந்திக்க வந்தவர் முஸ்தபாபாத்ஹில் வசிக்கும் பர்வேஸ் சைஃபி என்றும், அவர் வெல்டராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் தான் 1 வருடமாக காதலித்து வரும் 15 வயது சிறுமியை சந்திக்கவே அவர் வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தந்தை மீது போலிசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!