India
ராகுல் காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தம்.. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இம்மாநிலத்தில் வன்முறைவெடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக வன்முறை தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த வன்முறையை அமைதி படுத்தாமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதேபோல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி மாநிலத்தில் அமையை ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்ததை அடுத்து ஒன்றிய அரசு அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றார். தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மணிப்பூர் மாநில போலிஸார் அவரது காரை தடுத்து நிறுத்தினர். போலிஸாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால்,"பாதிக்கப்பட்டோரை சந்திக்காமல் திரும்பப் போவதில்லை. சாலை மார்க்கமாக அனுமதிக்கப் படாததால் ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூர் செல்ல ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல் காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "மணிப்பூரில் ராகுல் காந்தி வாகனம் போலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர் அங்கு சென்று நிவாரண முகாம்களில் வாடும் மக்களை சந்தித்து, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளார்.
ராகுல் காந்தியின் இரக்க உணர்வை தடுக்கின்றனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அனைத்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளையும் சிதைக்கிறது. மணிப்பூருக்கு தேவை அமைதி, மோதல் அல்ல" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!