India
‘அவுரங்கசீப்’-ல் இருந்து ‘அப்துல் கலாம்’.. முக்கிய பகுதியின் பெயரை மாற்றிய டெல்லி மாநகராட்சி !
அண்மைக்காலமாக டெல்லியில் முகலாய அரசர்களின் பெயர்கள் கொண்ட தெருக்கள், பகுதிகளின் பெயர்களை எல்லாம் மாற்றி வருகிறது டெல்லி மாநகராட்சி. அந்த வகையில் தற்போது அவுரங்கசீப் லேன் என்ற பெயருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட டெல்லியில் அமைந்திருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் (Mughal Gardens) பெயரை 'அம்ரித் உத்யன்' (Amrit Udyan) என்று பெயர் மாற்றம் செய்தது ஒன்றிய அரசு. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு முகலாய பெயரை மாற்றியுள்ளது டெல்லி மாநகராட்சி. அதாவது டெல்லி லுட்யென்ஸில் உள்ள 'அவுரங்கசீப்' தெருவின் பெயரை மாற்றி டாக்டர் ஏபிஜே அப்துல் காலமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் கலந்துரையாடி இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. என்டிஎம்சி உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர். இதையடுத்து இந்த தெருவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதிக்கு 'அவுரங்கசீப் சாலை' ஆங்கிலேயர் காலத்தில் இதன் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவுரங்கசீப் உத்தரவு பெயரில் கொல்லப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேக் பகதூரின் பெயரை, இந்த சாலைக்கு வைக்கும்படி தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமரிடம் மனு அளித்தது. ஆனால் அதனை மாற்றம் செய்யவில்லை.
இந்த நிலையில் பாஜக எம்.பி-யான மகேஷ் கிரி என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு வைத்த கோரிக்கையின் படி தற்போது 'அவுரங்கசீப் சாலை' என்பதற்கு பதில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் காலம் சாலை (Dr APJ Abdul Kalam Road) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெயர் மாற்றத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.
முகலாய பேரரசரான ஷாஜகான் - மும்தாஜ் தம்பதியர்களின் 5-வது வாரிசுதான் அவுரங்கசீப். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1658 - கி.பி. 1707 வரையாகும். இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர்களில் இவரும் ஒருவர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகிறது. சாகும் வரை இவர் மன்னராகவே இருந்து ஆட்சி புரிந்தார் என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!