India
பசு இறைச்சி வைத்திருந்ததாக காரில் சென்றவரை அடித்துக்கொன்ற இந்துத்துவ கும்பல்.. மஹாராஷ்டிராவில் கொடூரம் !
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் கோட்டி என்ற இடத்தில் உள்ள சினார் கோட்டி நெடுஞ்சாலையில், அப்துல் மஜித் அன்சாரி மற்றும் நாசர் ஷேக் ஆகியோர் தங்களது காரில் இறைச்சியை எடுத்துகொண்டு பக்கத்து நகரத்துக்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது நெடுஞ்சாலையில் பயங்கர ஆயுதங்களோடு இருந்த 25 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. தங்களை பசு காவலர்கள் என்று சொன்ன அந்த கும்பல் அந்த காரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது காரில் இருந்த இறைச்சியை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, அந்த பசு இறைச்சி எனக் கூறி, தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக தாக்கத்தொடங்கினர். சுமார் 3 மணி நேரம் அந்த கும்பல் இருவரையும் தாக்கிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் மஜித் அன்சாரி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களோடு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அந்த இறைச்சியை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அதன் பின்னரே இது மாட்டிறைச்சியா, வேறு இறைச்சியா என்பது தெரியவரும்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பசு காவல் கும்பல் மீதும் வழக்கு பதிவு செய்த நிலையில், அதில் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜுன் 8ஆம் தேதி அதே மஹாராஷ்டிராவில் தானே மாவட்டம் ஷாகாபூர் அருகே உள்ள விஹ்காவோன் கிராமத்தில் மாடுகளை மினிவேனில் ஏற்றிச் சென்ற லுக்மான் சுலைமான் அன்சாரி என்பவர் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !