India
3 நாட்களில் 2-வது நிகழ்வு: ஒரே பகுதியில் நடந்த சம்பவம்.. சாலையை கடக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
தற்போது பருவம் மாற்றம் காரணமாக இந்தியா முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு முதல் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது. இதனால் தண்ணீர் சில இடங்களில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கிழக்கு டெல்லியை சேர்ந்த 17 வயதுடைய சொஹைல் என்ற சிறுவன் கோடை விடுமுறை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற அந்த சிறுவன், கீழே இருந்த தண்ணீரில் காலை வைத்துள்ளார். அந்த சமயத்தில் அந்த தண்ணீருக்குள் அறுந்து கிடந்த மின் கம்பி மீது சிறுவன் கால் பட்டுள்ளது.
மின்கம்பியில் கால் பட்ட ஒரு நொடியிலேயே சிறுவன் தூக்கி எறியப்பட்டான். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள்ளும் சிறுவன் உயிரிழந்து விட்டார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மழை நேரத்தில் மின்கம்பியை இவ்வளவு கவனக்குறைவாக வைத்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகமும் பதற்றமும் நிலவியுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்று குழந்தைகள், குடும்பத்துடன் திரும்பி கொண்டிருந்த 32 வயது பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றபோது, அங்கிருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த சூழலில் தற்போது கிழக்கு டெல்லியில் சிறுவன் ஒருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது 2 நாட்களில் 2-வது சம்பவமாக கருதப்படுகிறது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !