India
“நா உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்..” - 26 வயது இளைஞரை நம்பிய 75 வயது மூதாட்டி.. இறுதியில் நேர்ந்த சோகம் !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது தாதர் (Dadar). இங்கு 75 வயது முதிய பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். தனியாக வசித்து வரும் இவருக்கு சமூக வலைதளங்கள் ஆறுதலாக இருந்துள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் Whatsapp மூலம் மூதாட்டிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்மூலம் தின்கோ என்ற 26 வயது இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து இருவரும் தொடர்ந்து வாட்சப் மூலம் பேசி வந்துள்ளனர். அப்போது தான் வெளிநாட்டில் இருப்பதாக கூறி பேசி வந்த அந்த இளைஞர், தனக்கு எந்த பெண்ணும் காதலிக்க கிடைக்கவில்லை என்று மனம் நொந்து பேசியிருக்கிறார். இதையடுத்து இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இப்படியாக நாளடைவில், தான் தங்களை காதலிப்பதாக மூதாட்டியிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மூதாட்டி நாளடைவில் அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் இந்தியா வந்து தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதோடு, அதற்கு முன்னதாக சில பரிசுகள் அனுப்புவதாக கூறியுள்ளார். பின்னர் மும்பை விமான நிலையத்தில் கஸ்டம்சில் இருந்து பேசுவதாக கூறி, இதனை பெற வேண்டுமானால் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதனை நம்பிய அந்த மூதாட்டி முதலில் அவர்கள் கூறி வங்கி எண்ணுக்கு ரூ.3.85 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். இருப்பினும் அவர் எந்த ஒரு பரிசையும் பெறவில்லை. இதையடுத்து மேலும் 8 லட்ச ரூபாய் காட்டியுள்ளார். இவ்வாறு அவர் சுமார் 12 லட்சம் வரை பணத்தை அந்த இளைஞரை நம்பி இழந்துள்ளார். இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை மூதாட்டி உணர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்தார் அந்த மூதாட்டி. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தங்கள் தீவிர முயற்சிக்கு பிறகு இந்த மோசடியில் ஈடுபட்ட மணிப்பூரை சேர்ந்த தின்கோ (26) மற்றும் அவரது நண்பர் சோலான் (24) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலிப்பதாக கூறி 26 வயது இளைஞர் ஒருவர் 75 வயது மூதாட்டியை ஏமாற்றி 12 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!