India
ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி சுற்றுலா சென்ற பெண் பலி.. டெல்லியில் அதிர்ச்சி ! - நடந்தது என்ன ?
தற்போது பருவம் மாற்றம் காரணமாக இந்தியா முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்றைய முன்தினம் இரவு முதல் அங்கே தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது. இதனால் தண்ணீர் சில இடங்களில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கிழக்கு டெல்லியின் ப்ரீத் விஹார் என்ற பகுதியை சேர்ந்த சாக்ஷி அஹுஜா (Sakshi Ahuja) என்ற இளம்பெண் தன்னுடன் மேலும் 2 பெண்களை கூட்டி கொண்டு நேற்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் வந்துள்ளார். அவர்களுடன் 3 குழந்தைகளும் வந்துள்ளனர். அப்போது வெளியேறும் கேட் அருகே சென்றபோது அங்கே தண்ணீர் கொஞ்சம் சூழ்ந்துள்ளது.
எனவே அதனை கிடக்க முயன்ற அந்த இளம்பெண், அருகில் இருந்த மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சட்டென்று தூக்கி வீசப்பட்டார். இதனை கண்ட அவருடன் வந்தவர்களும், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இளம்பெண் சாக்ஷி அஹுஜா பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இதுகுறித்து விசாரித்தனர்.
அப்போது இந்த விபத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் தனது தங்கை உயிர் போனதற்கான காரணம் என இறந்துபோன சாக்ஷி அஹுஜாவின் சகோதரி மாத்வி சோப்ரா குற்றம்சாட்டினார். தொடர்ந்து அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரயில்வே மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!