India
டிவி சத்தத்தை அதிகமாக வைத்து இளம்பெண்ணை அடித்தே கொன்ற உறவினர்கள்.. கொடூரத்தின் காரணம் என்ன ?
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த சூழலில் அவர்கள் வீட்டில் இருந்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அங்கும் இங்கும் தேடிய பிறகும் கிடைக்காத நிலையில், அந்த இளம்பெண் தான் எடுத்திருப்பார் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
ஆனால் அந்த பெண்ணுக்கு இது குறித்து தெரியவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரை விடாமல் தொந்தரவு செய்துள்ளனர். அதோடு அடித்து கொடுமை செய்துள்ளனர். தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அந்த பெண் கூறினாலும், அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இவரது அலறல் சத்தத்தை அக்கம்பக்கத்தினர் கேட்டு விட கூடாது என்பதால் டிவி சத்தத்தை அதிகமாக வைத்து தாக்கியுள்ளனர்.
சுமார் 2 நாட்களாக டிவி சத்தத்தை குறைக்காமல் வைத்ததால் அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் இந்த பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த காவல்துறையினர், அதனை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வரும் குடும்பத்தினரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!