India
தமிழ்நாடு முதல் ஜம்மு - காஷ்மீர் வரை.. பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் கூடிய 16 எதிர்க்கட்சிகள் - என்னென்ன ?
2024 மக்களவைத் தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்பது தொடர்பான, எதிர்க்கட்சித் தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது. இதில், நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 38 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. மீதமுள்ள 62 சதவிகித வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக்கொண்டன.
எனவே, 2024 இல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில், பாஜக-வுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்றவர்கள் கூறியிருந்தனர்.
அதனடிப்படையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை முறியடிக்கும் வகையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் ஆராய்வது பற்றியும், பாஜக-வை முறியடிப்பதற்கான திட்டங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கவும் ஜூன் 23 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக ஜூன் 12-இல் இக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முக்கியமான தலைவர்கள் சிலர் அன்றைய நாளில் கூட்டத்திற்கு வர முடி யாத நிலையில், தேதி மாற்றம் செய்யப் பட்டது. அதன்படி, பாஜக-வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 16 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அதில் எந்தெந்த கட்சி சார்பில் யார் யார் பங்கேற்கிறார் என்ற விவரம் பின்வருமாறு :
திமுக - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், TR பாலு
காங்கிரஸ் - மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, KC வேணுகோபால்
சிபிஎம் - சீதாராம் யெச்சூரி
சிபிஐ - டி ராஜா
தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார், சுப்ரியா சூலே, பிரபுல் படேல்
திரிணாமுல் காங்கிரஸ் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
ஆம் ஆத்மி - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சஞ்சய் சிங், ராகவ் சத்தா
ஐக்கிய ஜனதா தளம் (JDU) - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், லல்லன் சிங்
ராஷ்டிரிய ஜனதா தளம் - லாலு பிரசாத், தேஜஸ்வி
சிவசேனா (UBT) - உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத்
தேசிய மாநாட்டு கட்சி - உமர் அப்துல்லா
சமாஜ்வாதி கட்சி - அகிலேஷ்
ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி - மெகபூபா முப்தி
CPIML - தீபங்கர் பட்டாச்சார்யா
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
ராஷ்டிரிய லோக் தளம்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!