India
திருவண்ணாமலை TO தெலங்கானா.. பள்ளிகொண்ட பெருமாளாக நடித்த போலி சாமியார் 2 மனைவிகளுடன் அதிரடி கைது !
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில், ஒரு மகனும் உள்ளார். அவர் தெலங்கானா மாநிலம் வனபர்த்தி என்ற பகுதியை அடுத்துள்ள சுகுரு என்ற கிராமத்தில் கோயில் ஒன்றில் அர்ச்சகராக பணி புரிந்து வருகிறார். இவர்கள் குடும்பத்தோடு தெலங்கானா மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தெலங்கானாவில் சந்தோஷ்குமார், தன்னை மகா விஷ்ணுவின் அவதாரம் என்றும், தானே பெருமாள் என்றும், மக்களின் பிரச்னையை தீர்க்க கடவுளின் மருவுருவம் என்றும் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். மேலும் தனது 2 மனைவிகளும் தேவி, பூதேவி என்றும், தான் குறைகளை தீர்ப்பவன் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஐந்து தலைகள் கொண்ட பொம்மை பாம்பு படுக்கையில் படுத்து கொண்டு, தனது 2 மனைவிகளையும் தனது காலை பிடித்து விடுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து தானே பெருமாள் என்றும் கூறி வந்துள்ளார். இதனை நம்பி இவரை சந்திக்க கூட்டமும் கூடியது. தொடர்ந்து வந்தவர்களிடம், தான் பேசத்தவர்களை பேச வைத்ததாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைத்ததாகவும் கூறி பிரச்சாரம் செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தன்னை காண வரும் பக்தர்களுக்கு தன்னால் சரியாக கலந்துரையாட முடியவில்லை என்று கூறி அம்மாநிலத்தில் அமைந்துள்ள பாலமூறு மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலம் உமித்யாலா கிராமத்தின் தலைவர் சத்தியநாராயணன் என்பவரிடம், தனக்கு என்று தனியாக இடம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். அதன்பேரில், சத்யநாராயணாவும் கிராம மக்களுக்கு தெரிவித்து விவசாய நிலத்திற்கு மத்தியில் உள்ள வீட்டை இலவசமாக வழங்கினார்.
இவ்வாறு சந்தோஷ்குமார் குறித்த செய்திகள் காட்டுத்தீ போல் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் சென்றடைந்தது. ஒவ்வொரும் சந்தோஷ்குமாரை தரிசித்தால் அனைத்து பிரச்னைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும் என்று தகவல் பரவியது. இதனை நம்பி அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இதற்கு என்று நேரம் ஒதுக்கி மக்களிடம் பேசி வந்துள்ளார்.
அந்த பகுதியில் கூட்ட நேரிசல் வந்ததால் அந்த பகுதியில் உள்ள எஸ்.ஐ-க்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தோஷ்குமாரை அதிரடியாக கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை எச்சரித்து திரும்ப அனுப்பினர். தானே கடவுளின் அவதாரம் என்று கூறிய போலி சாமியார், தனது 2 மனைவிகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!