India
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. CPI பொதுச் செயலாளர் டி.ராஜா கேள்வி!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.
இந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும், பா.ஜ.க அரசியலும்தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வன்முறையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் மிசோரம், அசாம் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் மணிப்பூர் அனைத்து கட்சியினரைச் சந்திக்கப் பிரதமருக்கு நேரம் இல்லை. ஆனால் அமெரிக்கா செல்ல நேரம் உள்ளதா? என சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் பேசிய டி.ராஜா, "பா.ஜ.கவின் பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. 50 நாட்களுக்கு மேல் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் பிரதமர் தலையிடாமல் இருப்பது ஏன்? மணிப்பூர் அனைத்து கட்சியினரைச் சந்திக்கப் பிரதமருக்கு நேரம் இல்லை. ஆனால் அமெரிக்கா செல்ல நேரம் உள்ளது.
மணிப்பூர் முதலமைச்சர் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு அமைதி ஏற்படுத்த வேண்டும். ஜூன் 23ம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!