India
மொபைல் App டவுன்லோட் செய்ய தாமதம் ஆனதால் ஆத்திரம்.. 23 வயது மகனை கத்தியால் குத்திய 64 வயது தந்தை !
டெல்லியின் மது விஹார் பகுதியில் அமைந்துள்ள IP Extension என்ற இடத்தில வசித்து வருபவர் அசோக் சிங். 64 வயதுடைய இவர்,தனது மனைவி மற்றும் ஆதித்யா சிங் என்ற 23 வயதுடைய மகனுடன் ஒரே வீட்டில் இருந்து வருகிறார். அசோக் சிங், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
அதே போல் மகன் ஆதித்யா சிங், குருகிராம் பகுதியில் கம்ப்யூடர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். எனவே வீட்டு செலவை தற்போது மகனும் சேர்ந்து பார்த்து கொள்கிறார். இதனிடையே கணவன் மனைவிக்குள் சிறுசிறு விஷயத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் தந்தை அசோக், பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அப்போது அந்த பிளாட்டை விற்பனை செய்தவர்கள் அதற்கான தொகையை மொபைல் ஆப் மூலம் அனுப்பும்படி கூறியுள்ளனர். எனவே, தனது மனைவியிடம் இதனை கூறி அந்த ஆப்பை டவுன்லோட் செய்யும்படி கூறியுள்ளார் அசோக். அவரும் அதனை டவுன்லோட் செய்துள்ளார். ஆனால் அந்த ஆப் டவுன்லோட் ஆக நேரமாகியுள்ளது. இதனால் பணம் அனுப்ப தாமதமாகியுள்ளது.
இதனால் கோபமடைந்த அசோக், தனது மனைவியா திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிச்சலடைந்த மகன் ஆதித்யா, தனது தாய்க்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரது சண்டையையும் விலக்கி வைக்கவும் முயன்றுள்ளார்.
மகன் பேசுவதை கேட்ட அசோக், மேலும் ஆத்திரம் கொண்ட தந்தை அசோக், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மகன் ஆதித்யாவின் நெஞ்சில் இரு முறை குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை தாயார் அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவமனையில் சேர்ந்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து தந்தை அசோக் சிங்கை கைது செய்தனர். தற்போது தந்தை அசோக் மீது ஐபிசி பிரிவு 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகன் ஆதித்யா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய தாமதமானதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது மகனை தந்தையே கத்தியால் குத்தியுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?