India
ஒரு மாதம் கடந்தும் பற்றியெரியும் மணிப்பூர்.. தீக்கிரையாக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரின் வீடு !
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து. இந்த நிலையில், சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், அங்கு குறிப்பிட்ட இரு சமூக மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.
மோரே நகரில் குக்கி குழுவினரை இலக்கு வைத்து மைத்தேயி இனத்தவர் தாக்கிய நிலையில் தாக்குதலுக்கு அஞ்சி குக்கி பழங்குடி மக்கள் தங்கள் இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த வன்முறையில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன்முறை தொடங்கி ஒரு மாதம் கடந்தும் வன்முறை தொடர்ந்து வருவதால் இந்த விவகாரத்தில் மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் பெரும் தோல்வியைத் தழுவியதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே கடந்த வாரம் மணிப்பூர் பெண் அமைச்சர் நெம்ச்சா கிப்ஜென் என்பவரது வீட்டை வன்முறை கும்பல் தீ வைத்து எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது அமைச்சர், மற்றும் அவரின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!