India
தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்க நகை திருட்டு.. குற்றவாளிகளை பொறிவைத்துப் பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம், மங்களூர் அருகே முல்கி காவல் சரகம் அய்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஹரீஷ் செட்டி. இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து இரண்டு கிலோ தங்க நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து ஹரீஷ் செட்டி முல்கி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
ஆனால், இதில் போலிஸாருக்கு எதுவும் துப்பு கிடைக்கவில்லை. பின்னர் இந்த வழக்கு மாநகர குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் போலிஸாருக்கு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் தங்கி இருக்கும் இடம் குறித்து போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலிஸார் இரண்டு பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் உடுப்பியைச் சேர்ந்த கணேஷ் நாயக் மற்றும் குடகு மாவட்டம் மடிக்கேரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் இருந்த ஒரு கிலோ தங்க நகைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 55 லட்சம். இவர்களிடம் தொடர்பிலிருந்த மற்ற நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!