India
ஒடிசா ரயில் விபத்தில் விபத்துக்குள்ளான புதுமணத் தம்பதி.. திருமணமான 2 நாளில் சோகம்.. தற்போதைய நிலை என்ன ?
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே 2-ம் தேதி இரவு நேரத்தில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின.
தொடர்ந்து அடுத்தடுத்து 3 ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது; மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதுமிலிருந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்தில் விபத்துக்குள்ளான புதுமணத் தம்பதியினர் தற்போது ஒன்றாக மருத்துவமனையில் இருக்கும் செய்தி வெளிவந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த முகமது ரஃபீக், தீபிகா பாலி ஆகியோருக்கு, கடந்த மே மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் இருவரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் 2-ம் தேதி பயணம் செய்துள்ளனர்.
அப்போது இவ்ர்கள் பயணம் செய்த ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முகமது ரஃபீக் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், தீபிகா பாலி அறுவை சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கணவர் படுகாயம் அடைந்த நிலையில், அவரையும் தன்னையும் ஒரே இடத்தில வைத்து சிகிச்சை அளிக்குமாறு தீபிகா கூறியுள்ளார்.
எனினும் அவர்களுக்கு வேறு வேறு இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபிகா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரின் கணவர் தற்போதும் சிகிச்சையில் உள்ளார். அவரை அவரின் மனைவி தற்போது கவனித்து வருகிறார். இந்த தகவல் தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!