India
காதலியை கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசிய கோயில் பூசாரி -4 நாட்களுக்கு பிறகு கைது செய்த போலிஸ்.. பின்னணி?
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஷரூர் நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா. 36 வயதாகும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் சாய் கிருஷ்ணா, அந்த பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். அந்த கோயிலுக்கு பக்தர்கள் வந்து வழிபட்டு வந்துள்ளனர்.
அந்த வகையில் நற்குடா என்ற கிராமத்தை சேர்ந்த அப்சரா என்ற 30 வயது இளம்பெண்ணும் கோயிலுக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது பூசாரி சாய் கிருஷ்ணாவுடன் அப்சராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கினர். இதனால் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
மேலும் அப்சரா கர்ப்பமாகி, சாய் கிருஷ்ணாவின் வற்புறுத்தல் காரணமாக கர்ப்பத்தை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு சாய் கிருஷ்ணா, அப்சராவிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்துள்ளார். இதனால் எங்கே தன்னை ஏமாற்றிவிடுவாரோ என்றார் பயத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார் அப்சரா.
ஆனால் அதற்கு சாய் கிருஷ்ணா மறுத்து வந்துள்ளார். எனவே கோபத்தில் அப்ஸரா அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் கோயிலில் வைத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இருவருக்கும் தினமும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் சம்பவத்தன்றும் சண்டை நிகழ்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த பூசாரி சாய் கிருஷ்ணா, அபசாராவை தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை கண்டு பதறிய சாய், அவரது சடலத்தை மறைக்க எண்ணியுள்ளார். எனவே அவரது உடலை சரூர் நகருக்கு எடுத்து சென்று கழிவு நீர்த் தொட்டியில் வீசியுள்ளார். இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று அப்சராவின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த சாய் கிருஷ்ணாவிடமும் விசாரித்தனர். அப்போது அவரது பதிலில் சந்தேகமடைந்து கிடுக்குபிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கழிவுநீர் தொட்டியில் கிடந்த அப்ஸராவின் சடலத்தை 4 நாட்களுக்கு பிறகு மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து பூசாரி சாய் கிருஷ்ணாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்திய காதலியை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசிய கோயில் பூசாரியின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!