India
உயிருள்ள பாம்பை வாயால் கடித்து மென்ற சிறுவன்.. அதிர்ந்த மருத்துவர்கள்.. இறுதியில் நடந்தது என்ன ?
உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் பகுதியை அடுத்துள்ளது மத்னாபூர் என்ற கிராமம். இங்கு தினேஷ் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையோடு வசித்து வருகிறார். 3 வயதுடைய இவரது மஃ ஆயுஷ், சிறுவர்களுடன் விளையாடி வருவார். அந்த வகையில் சம்பவத்தன்று தனது வீட்டின் வாசலில் விளையாடியுள்ளார்.
அப்போது சிறுவன் திடீரென கத்தி அழுதுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக ஓடி வந்து பார்த்தனர். அப்போது சிறுவன் வாயில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்து போன அவர்கள் சிறுவனின் வாயில் இருந்த பாம்பை எடுத்து வெளியே எடுத்து போட்டுவிட்டு, உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவனுடன் சேர்ந்து சிறுவன் வாயில் இருந்த பாம்பையும் ஒரு பாலித்தீன் கவரில் போட்டு உடன் எடுத்து சென்றனர். பின்னர் மருத்துவமனையில் இதுகுறித்து பெற்றோர் விளக்கினர். இருப்பினும் இதனை மருத்துவர்கள் முதலில் நம்பவில்லை. எனவே தான் பாலித்தீன் கவரில் இருந்த இறந்து போன பாம்பை காண்பித்தனர்.
இதனை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள் உடனடியாக சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவரது உடலில் விஷம் எதுவும் உள்ளதா என்று சுமார் 24 மணி நேரம் மருத்துவமனையில் சிறுவன் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனை செய்த பிறகு சிறுவன் உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விஷமில்லை என்பதால் சிறுவனின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களில் சிறுவர்களை மிகவும் கவனமாக பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பாம்பை வாயாலே கடித்து கொன்ற 3 வயது சிறுவனின் செயல் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!