India

3 மாதத்துக்கு முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. கண்டுகொள்ளாத ரயில்வே அமைச்சகம்.. அதிரவைக்கும் பின்னணி !

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது.

தவறான சிக்கல் கொடுத்த காரணத்தாலே விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என 4 பேர் கொண்டக் குழு ஒன்று முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது.

அதில், "சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் முதலில் கொடுத்து விட்டு, உடனே அதை ரத்து செய்துள்ளனர். இதனால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றுள்ளது.

இந்த லுப் லைனில் இருந்த ரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த விபத்து தொடர்பாக 3 மாதத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 8ம் தேதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், லோகோ பைலட் சாதுர்யத்தால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்க்கு சிக்னல் கோளாறே காரணம் என்றும், இதனால் வரும் காலத்தில் மிக்பெரிய விபத்துகள் ஏற்படலாம், எனவே இந்த விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் என்பவர் செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த கடிதம் குறித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் துறை அமைச்சரும் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் ஆர்வம் கட்டாததுமே இந்த பெரும் விபத்து ஏற்பட காரணமாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Also Read: ”அவ்வளவுதான் உயிர் போயிடுச்சினு நினைச்சோம்.. ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பியவர்கள் சொன்ன அதிர்ச்சி!