India

ரூ. 4000 டிக்கெட் 80,000 வரை விற்பனை.. ஒடிசா ரயில் விபத்தில் லாபம் பார்க்கும் தனியார் விமான நிறுவனங்கள் !

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது.

தவறான சிக்கல் கொடுத்த காரணத்தாலே விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என 4 பேர் கொண்டக் குழு ஒன்று முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது.

அதில், "சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் முதலில் கொடுத்து விட்டு, உடனே அதை ரத்து செய்துள்ளனர். இதனால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றுள்ளது.

இந்த லுப் லைனில் இருந்த ரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த தங்களை உறவினர்களை சந்திக்க ஏராளமானோர் சிறப்பு ரயில்கள் மூலமும், விமானம் மூலமும் ஒடிசா மாநிலத்திற்கு சென்றவண்ணம் உள்ளனர்.

ஆனால், தனியார் விமானங்கள் இதனை லாபத்துக்கான வாய்ப்பாக பயன்படுத்தி டிக்கெட் விலையை பலமடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளன. டிக்கெட் விலையை உயர்த்த வேண்டாம் என விமானத்துறை அமைச்சகம் அறிவுறுத்திய நிலையிலும் தனியார் நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமான நிறுவனங்கள் விலையை உயரத்தியதற்கு அரசை விமரசித்துள்ளார், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தை கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை... 4000 ரூபா டிக்கெட் 24000 முதல் 80000 ரூபாய் வரை. அரசு விமானம் இருந்தால் "வந்தே பாரத்" என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா! கருணை இல்லா அரசே... உறவினர் பயணக் கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்" என பதிவிட்டுள்ளார்.

பாஜக அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்ததால்தான் தனியார் நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுகிறது என நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் அதனை குறிப்பிட்டு அரசை விமர்சித்துள்ளார்.

Also Read: சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு குரல்.. மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தில் திருப்பம்.. சிக்கலில் பாஜக !