India

ஒடிசா ரயில் விபத்து.. “உடனே பதவி விலக வேண்டும்” - மோடி அரசை கடுமையாக சாடிய சுப்பிரமணியன் சுவாமி !

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம் புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது.

இந்த ரயில் விபத்தில் இதுவரை 290பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 747 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டு காலத்தில் நடந்த ரயில் விபத்துகளில் இது மிகவும் மோசமான விபத்து என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தேசிய பேரி டர் மீட்பு படையின் தலைவர் அதுல் கர்வால் கூறுகையில், “உயிரிழந்த வர்களின் எண்ணிக்கையின் அடிப்படை யில் பார்க்கும்போது இது மிகவும் மோச மான விபத்தாகும். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை யின் 9 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ளன” என்றார். கடந்த 30 ஆண்டு களில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-ஆவது மிகப்பெரிய விபத்து என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இரு ரயில்களி லும் 2296 பேர் முன்பதிவு செய்து பய ணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேரும், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,039 பயணிகளும் முன்பதிவு செய்து பயணித்திருந்ததாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இந்நிலையில், முன் பதிவு செய்யாமல் பயணித்தவர்களில் பலர் உயிரிழந்திருப்பதால், அவர் களை அடையாளம் காண்பது மற்றும் தகவல்கள் திரட்டுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு பட்ஜெட்டில் அம்ரித் பாரத் ஸ்டேசன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்தப் போவதாக மோடி அரசு பெரும் விளம்பரங்களை செய்தது. பயணிகளுக்கு நல்ல அனு பவத்தை கொடுக்கப் போகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களது பாதுகாப்பை விட்டுவிட்டது. ஒன்றிய பாஜக அரசு ரயில்வே துறையில் உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பவும், சிக்னலை நவீனமய மாக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் எவ்வளவு முதலீடு செய்தது?

சிக்னல் நவீனமயப்படுத்த லுக்கு நிபுணர்களிடமோ, தொழிற் சங்கங்களிடமோ, ரயில்வே வாரியத்தி டமோ அரசாங்கம் கலந்தாலோசித் ததா? என கேள்வி எழுகிறது. 2022-2023இல் உயிர்ச் சேதம் உள் ளிட்ட பெரும் விளைவுகளை உருவாக் கிய 48 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டை விட 13 விபத்துகள் அதிகரித்துள்ளன என்பதை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையின் மூலம் அறிய முடிகிறது.

இந்நிலையில் ஒன்றிய அரசை பா.ஜ.கவின் மூத்த தலைவர் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ““ஒடிசாவில் வேகமாக சென்று விபத்துக்குளாளன கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அந்த தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ரயில் அல்ல. அதுமெதுவாக செல்லக்கூடிய ரயில்களுக்கான தண்டவாளம்.

எனவே பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் உடனடியாக ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். பிரதமர் மோடி திறமையற்ற அல்லது பொருத்தமற்ற அமைச்சர்ளை நியமிப்பதில் உலகப் புகழ்பெற்றவராகவே திகழ்கிறார். இதற்கு மற்றொரு உதாரணம் மணிப்பூர் கலவரம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒடிசா ரயில் விபத்து.. ”பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்” : தலைவர்களின் கருத்துக்கள் என்ன?