India
#LIVE | ஒடிசா ரயில் கோர விபத்து : தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்!
ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்ற தொழில்நுட்பக் கோளாறே காரணம் என ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் 2வது நாளாக ஆய்வு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
101 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்!
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 101 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். 31 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. பயணிகளின் உறவினர்கள் ஒடிசா செல்ல சென்னையிலிருந்து இன்றிரவு சிறப்பு ரயில் புறப்படும் என காவல்துறை ரயில்வே எஸ்.பி.பொன்ராம் கூறியுள்ளார்.
பயணிகளின் உறவினர்களுக்காக சிறப்பு ரயில்
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா மாநிலம் செல்ல இன்றிரவு 7.25 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என ரயில்வே காவல்துறை எஸ்.பி அறிவிப்பு
ஒடிசா சென்றடைந்தது தமிழக அரசின் குழு !
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாடு பயணிகளுக்கு உதவுவதற்காக புறப்பட்ட தமிழக அரசின் குழு ஒடிசா சென்றடைந்தது
288 பயணிகள் உயிரிழப்பு :
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பயணிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளை மீட்கும் பணி நிறைவு :
ஒரிசா ரயில் விபத்தில் பயணிகளை மீட்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மீட்புப்படையினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறும் என கருதப்படுகிறது
Also Read: ஒடிசா ரயில் விபத்து.. உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. முதலமைச்சர் துரித நடவடிக்கை !
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் :
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் -பேரிடர் மீட்புக் குழுவினர் தகவல்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!