India

இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. 294 பேர் பலி - 50 பேர் கவலைக்கிடம் - 747 பேர் படுகாயம்!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் தவறான சிக்கல் கொடுத்த காரணத்தாலே விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என 4 பேர் கொண்டக் குழு ஒன்று முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது.

அதில், "சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் முதலில் கொடுத்து விட்டு, உடனே அதை ரத்து செய்துள்ளனர். இதனால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றுள்ளது.

இந்த லுப் லைனில் இருந்த ரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 747 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Also Read: ஒடிசா ரயில் விபத்து.. ”பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்” : தலைவர்களின் கருத்துக்கள் என்ன?