India
கால்வாயில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்.. திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவம்!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக். இவர் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவர் காணவில்லை.இதனால் இவரது மகன் நவ்ஷத், தனது தந்தை இரண்டு நாட்களாகக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் அட்டப்பாடி என்ற பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சூட்கேஸ் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அங்குச் சென்று சூட்கேஸை திறந்து பார்த்தனர்.
அப்போது அந்த சூட்கேஸிற்குள் சடலம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் சூட்கேஸில் இருந்த சடலம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் காணாமல் போன சித்திக் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவரை யார் கொலை செய்தது, உடலை சூட்கேஸில் அடைத்து வீசியது என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இவரது உணவகத்தில் வேலை பார்த்து வரும் ஷிபிலி மற்றும் பர்ஹானா ஆகிய இருவர் தான் சித்திக்கை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்