India
”இந்த உரிமை மோடிக்கு கிடையாது”.. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணிக்கத் திட்டம்!
இந்தியாவில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது உள்ள நாடாளுமன்றம் பழமையாக உள்ளது என கூறி புதிய நாடாளுமன்றத்திற்கு 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதே புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நேரம் எண்பதால் மக்கள் பணத்தை புதிய நாடாளுமன்றம் கட்டி வீணடிக்க வேண்டாம் என அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தின.
இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "மோடி அரசாங்கம் திரும்பத் திரும்ப அரசியல் நடைமுறைகளை அவமதிக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல் AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "பொதுமக்கள் பணத்தில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை ஏதோ தன் நண்பர்கள் கொடுத்த பணத்தில் கட்டியது போல் பிரதமர் நடந்து கொள்கிறார்" என காட்டமாக விமர்சித்துள்ளார். இப்படி ராகுல் காந்தி, சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, ராஷ்டிரிய ஜனதா தளம் பிரஷாந்த் ஜா, ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிதலைவர்களும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க அனைத்து எதிர்கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைன், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!