India

தாயின் இரகசிய உறவால் கடுப்பான மகள்:ஒரு கிராமத்துக்கே தீ வைத்த கொடூரம் -19 வயது மகள் செயலின் பின்னணி என்ன?

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே புதிய சேனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இங்கு 19 வயது கீர்த்தி ரெட்டி என்ற இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவரது தாய்க்கு அந்த ஊரில் உள்ள சில ஆண்களுடன் இரகசிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த கீர்த்தி தனது தாயை கூட்டி வேறு பகுதிக்கு செல்ல நினைத்துள்ளார்.

அதற்காக தாயிடம் கேட்டபோது, அவர் வர மறுத்துள்ளார். எனவே அவரை இந்த ஊரை விட்டு வெளியேற்ற பயங்கர திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி, முதலில் அவரது வீட்டில் உள்ள பீரோவில் இருக்கும் பணத்திற்கு தீ வைத்துள்ளார். திடீரென பீரோ தீப்பற்றி எரிவதை கண்ட தாய் பயந்து போனார். யாரோ பில்லி சூனியம் வைத்ததாக எண்ணினார்.

தொடர்ந்து தூங்கி கொண்டிருந்த தாயின் சேலையிலும் தீவைத்துள்ளார் கீர்த்தி. இவை எதுவும் அறியாத தாயோ, பதறியடித்து போனார். உயிருக்கு ஆபத்து எதுவும் இன்றி தப்பித்த தாய், பக்கத்து வீட்டு உதவியோடு மந்திரவாதி ஒருவரை வரவழைத்து மந்திரத்தார். அப்படி இருந்து தீ விபத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. அப்போதும் கூட கீர்த்தி அவரது தாயை அழைத்துள்ளார், ஆனால் அவர் அந்த ஊரை விட்டு வர மறுத்துவிட்டார்.

எனவே வேறு ஒரு திட்டம் தீட்டி, அவரது தாயுடன் உறவில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று சந்தேகித்த நபர்களின் வீடுகள், வைக்கோல்களை எரித்தார். இதனால் ஊருக்கே யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதாக ஊர் மக்கள் அனைவரும் பயந்துபோனர். இப்படியே தொடர்ந்து 18 வீடுகள் திடீரென எரிந்ததில் மக்கள் பெருமளவு பயந்துபோனர்.

சாமியார் வைத்தும் இதுபோல் சம்பவங்கள் தொடர்கிறது என்பதால், மக்கள் அனைவரும் என்ன செய்வது என்று திகைத்து போனர். இந்த தீ விபத்துக்கு காரணம் முதலில் தீயசக்தி என்று நினைத்த மக்கள், பின்னர் ஆசாமி என்பதை உணர்ந்தனர். இதையடுத்து இந்த மர்மம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சுமார் ஒரு மாத காலமாக போலீசார் அந்த ஊர் மக்கள் ஒவ்வொரு பேரையும் விசாரித்தனர். அப்போது தான் கீர்த்தியும் மாட்டினார். அவரிடம் விசாரித்ததில் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் தனது தாயின் தகாத உறவால் தான், தன்னால் படிக்க முடியாமல் Fail ஆனதாகவும், எனவே தாயை ஊரை விட்டு கூட்டி செல்ல திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அவர் மீது IPC 435, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய் மீது சந்தேகம் ஏற்பட்டு மகளே, ஒரு ஊரை எரித்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: CBI நீதிமன்றத்தில் மனிஷ் சிசோடியாவின் கழுத்தை பிடித்து இழுத்து சென்ற டெல்லி போலிஸ்: ஆம் ஆத்மி கண்டனம்!