India

பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணையே திருமணம் செய்த இளைஞர்.. பரிதாபம் காட்டாமல் தண்டனை வழங்கிய நீதிபதி !

மும்பையை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளது. தொடர்ந்து பேசி வந்த இருவரும் ஒருகட்டத்தில் காதலர்களாக மாறியுள்ளனர். அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக அந்த இளைஞர் உறுதி கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் காதலர்கள் இருவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை மறைவான இடத்துக்கு அழைத்துச்சென்ற அந்த இளைஞர் அந்த பெண்ணை அவரின் விருப்பமின்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதோடு அதன்பின்னர் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய நிலையில் அதாற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய மறுத்ததாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த அந்த இளைஞர் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

ஆனாலும், தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த இளைஞர் குற்றம் செய்தது உறுதியானது. மேலும், அந்த இளைஞருக்கு மூன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், அந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டாலும் அவர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அந்த பெண்ணும் உறுதியாக இருந்ததால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதியின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

Also Read: கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசல்..மூச்சித்திணறி விழுந்த ரசிகர்கள்.. 12 பேர் பலியானதால் அதிர்ச்சி !