India

விடாத பழக்கம்.. ஆத்திரத்தில் மகனையே தீ வைத்து எரித்த குடும்பம்.. கைது செய்த போலிஸ்.. பின்னணி என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் அம்பத் என்ற பகுதியில் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில், தனது மனைவி, மகன், பெற்றோர், சகோதரன் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் இவர் மது போதைக்கு மிகவும் அடிமையாக இருந்துள்ளார். மது மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கும் அடிமையாகியுள்ளார்.

இதனால் இந்த வாலிபருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் தகராறு இருந்துள்ளது. இந்த சூழலில் சம்பவத்தன்று அந்த வாலிபர் முழு போதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பம் அவரை சரமாரியாக வசைபாடியுள்ளது. இருப்பினும் அதனை இவர் செவிமடுக்கவில்லை.

மாறாக இவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆத்திரமடைந்த குடும்பம் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் கம்பை எடுத்து அவரை தொடர்ந்து பலமாக அடிக்க, சுருண்டு விழுந்து உயிரிழந்தார். வாலிபர் உயிரிழந்ததையடுத்து பதறிப்போன குடும்பம் செய்வதறியாது திகைத்து நின்றது. ஆரம்பத்தில் போலீசில் சரணைடைய எண்ணிய குடும்பம், பின்னர் இதனை மறைக்க எண்ணியுள்ளது.

எனவே அதன்படி வாலிபரின், தந்தை, சகோதரன், மகன் ஆகியோர் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். எரித்த பின்னர் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க தொடங்கினாலும், அந்த வாலிபர் குறித்த செய்தி போலீசாருக்கு கிடைத்துள்ளது. எனவே அவரை தேடி வந்தபோது அவர் இல்லை என்றதும் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக அனைவரும் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனைவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தந்தை, சகோதரன், மகன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குழந்தை கேட்டு தொந்தரவு செய்த காதலி.. தொடர்ந்து மறுத்து வந்த காதலன்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !