India
”பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது” .. கர்நாடக மக்களுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி!
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 35 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேபோல் பா.ஜ.க கட்சி 48 இடத்திலு வெற்றி பெற்று 16 இடங்களில் முன்னிலை. மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
கர்நாடகத்தில் ஆட்சியை இழந்துள்ளதால் தென்னிந்தியாவில் இருந்த ஒரு மாநிலத்தையும் பா.ஜ.க இழந்துள்ளது. தென் மாநிலங்களில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என பா.ஜ.க தலைவர்கள் கூறிய நிலையில் தற்போது தென் மாநிலத்தில் பா.ஜ.க முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலைக் கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது.
முதல் அமைச்சரவை கூட்டத்தில் 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்பதைக் கர்நாடக மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!