India
கர்நாடக தேர்தல் 121 இடங்களில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வெற்றி.. படுதோல்வி அடைந்த 14 பா.ஜ.க அமைச்சர்கள்!
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும்15 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேபோல் பா.ஜ.க கட்சி 48 இடத்திலு வெற்றி பெற்று 16 இடங்களில் முன்னிலை. மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் 19 இடங்களில் முன்னியில் உள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு 136 இடங்கள் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி சாதனை படைத்துள்ளது. 1989ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 178 இடங்களில் வெற்றி பெற்றது.
அதேநேரம் பா.ஜ.க கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. பா.ஜ.க கட்சியின் 14 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1. முத்தோள் தொகுதியில் போட்டியிட்ட பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோள் தோல்வி!
2. சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தோல்வி.
3. பெல்லாரி ஊரகம் தொகுதியில் போட்டியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.ஸ்ரீ.ராமுலு தோல்வி
4. பீளகி தொகுதியில் போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி தோல்வி.
5 வருணா தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா தோல்வி!
6. சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தோல்வி!
7. எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தோல்வி!
8. ஒசகோட்டை தொகுதியில் போட்டியிட்ட சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் தோல்வி!
9. கிருஷ்ணராஜ் பேட் தொகுதியில் போட்டியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடா தோல்வி!
10. ஹிரேகேரு தொகுதியில் போட்டியிட்ட விவசாயத் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தோல்வி!
11. சிக்கநாயகனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மாதுசாமி தோல்வி!
12. சிர்சி தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரிதோல்வி!
13. திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தோல்வி!
14. நாவல்குண்ட் தொகுதியில் போட்டியிட்ட துணி நூல் துறை அமைச்சர் சங்கர் மூனனேகுப்பா தோல்வி!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?