India
அரசு பள்ளி ஆசிரியரால் பெண் மருத்துவர் குத்தி கொலை.. வெளிவந்த குற்றவாளி எடுத்த வீடியோ.. நடந்தது என்ன ?
கேரளாவை சேர்ந்தவர் சந்தீப் நெடும்பன் (45). அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது இவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை இரவு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக கொட்டாரகரை தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவரை பரிசோதனை செய்ய பெண் மருத்துவர் வந்தனா (25) என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆவேசமான சந்தீப், அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் வெறித்தனமாக அவரை குத்தியுள்ளார்.
இதில் இரத்த வெள்ளத்தில் மருத்துவர் வந்தனா சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட போலிசார், சந்தீப்பை பிடிக்க முயன்றனர். அப்போது போலிஸாரையும் சந்தீப் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சக போலீசார் படுகாயமடைந்தாலும், சந்தீப்பை கஷ்ட பட்டு கட்டுக்குள் கொண்டு வந்து கட்டி போட்டனர். இதையடுத்து கீழே விழுந்த மருத்துவர் வந்தனாவை மீட்டு சோதனை செய்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பெண் மருத்துவர் வந்தனா கொலைக்கு ஞாயம் கேட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி கேரள மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் அதிரடியாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 13 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. குற்றவாளி சந்தீப் எடுத்துள்ள இந்த வீடியோவில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருடைய ரத்த கறைகளை செவிலியர் ஒருவர் துடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவரின் அருகில் மருத்துவர் வந்தனா நின்றுகொண்டிருந்துள்ளார். இந்த வீடியோவை ந்தீப் தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னரே இந்த கொலை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த வீடியோவை அவர் நண்பருக்கு அனுப்பியது ஏன் என்பது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?