India
பெண்களே எச்சரிக்கை! Lift கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த டாக்சி ஓட்டுநர்: 150 CCTV உதவியோடு கைது!
சண்டீகர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரை சந்திக்க கடந்த ஏப்ரல் 30-ம் தேதி டேராடூன் சென்றுள்ளார். பின்னர் அங்கே இருந்து மீண்டும் தனது ஊருக்கு வர எண்ணிய இளம்பெண், தனது பெண் தோழி ஒருவர் உதவியோடு வந்துள்ளார். அப்போது அவர், இந்த பெண்ணை இரவு சுமார் 9 மணி அளவில் சிம்லா புறவழிச் சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். அங்கே அந்த பெண் பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த நேரம், அந்த வழியே டாக்சி ஒன்று சென்றுள்ளது.
அப்போது டாக்சி ஓட்டுநர் லிப்ட் வேண்டுமா என்று கேட்க இந்த பெண்ணும் ISBT பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே தானும் அந்த வழியாக செல்வதாக கூறிய ஓட்டுனரின் பேச்சை நம்பிய இளம்பெண், அவரது டாக்சியில் ஏறியுள்ளார். சில மணி நேரத்தில் ISBT பகுதி வந்துவிடவே, ஓட்டுநர் அதையும் தாண்டி சென்றுள்ளார்.
இதனால் அலறி கத்தவே, ஓட்டுநர் மிரட்டியுள்ளார். மேலும் அவரை ஒரு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பணம், மொபைல் போன் உள்ளிட்டவையை எடுத்துக்கொண்டு, இந்த பெண்ணை அதே காட்டுக்குள் தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
காட்டில் இருந்து வெளியே வர பயந்த அந்த பெண்,விடிய விடிய காட்டுக்குள் இருந்து, பின்னர் தனது பகுதிக்கு சென்று நடந்தவற்றை தன் தோழியிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தோழி உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் சுமார் 150 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், சம்மந்தப்பட்ட ஓட்டுநரின் கார் எண்ணை கண்டறிந்தனர். அதன்பேரில் விசாரிக்கையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பீஹாரி நகர் கிராமத்தைச் சேர்ந்த மணிஷ் குமார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த மணிஷ் குமாரை கைது செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!