India
Honey Trap : அரசியல்வாதிகள், போலிஸ், பிஸினஸ்மேன்.. ஆபாச வலை வீசி பண மோசட செய்த கேரளத்து ‘அஸ்வதி அச்சு’ !
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே இருக்கும் ஒரு பகுதியை சேர்ந்தவர் அஸ்வதி. இவர் அஸ்வதி அச்சு என்ற பெயரில் முகநூல் தொடங்கியுள்ளார். அப்போது பூவார் பகுதியைச் சேர்ந்த 68 முதியவர் ஒருவரிடம் பேசி வந்துள்ளார். பின்னர் முதியவரிடம் மொபைல் எண் பெற்று இருவரும் பேசி வந்துள்ளனர்.
அப்போது அஸ்வதி முதியவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அந்த முதியவர் அஸ்வதியை திருமணம் செய்ய எண்ணி அதற்காக தயாரானார். ஆனால் தனக்கு ரூ.40 ஆயிரம் கடன் இருப்பதாகவும், அதனை தீர்த்த பிறகே, திருமணம் செய்துகொள்ள முடியும் என்று அந்த பெண் கூற, உடனே இந்த முதியவரும் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்த சில நாட்களிலே அவரது ஐடி, மொபைல் எண் உள்ளிட்ட எதுவும் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், சைபர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அந்த பெண் யார் என்ன என்று விசாரித்து கைது செய்தனர்.
அப்போது அந்த பெண் அஸ்வதி அச்சு, அனுஸ்ரீ, அனு உள்ளிட்ட பல பெயர்களில் போலி முகநூல் கணக்குகளை தொடங்கி பல ஆண்களிடம் பேசி வந்துள்ளது தெரியவந்தது. மேலும் அப்படி பேசி பணமுள்ள சில ஆண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களிடம் இருந்து பணத்தை கறந்து வந்துள்ளார். முக்கியமாக தனது புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்து, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து விட்டு பின்னர் சில காலங்கள் தலைமறைவாக இருந்துவந்துள்ளார்.
இவரது வலையில் சில அரசியல் பிரமுகர்களும், போலீசாரும் உள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் மீது ஏற்கனவே திருவனந்தபுரம் பாங்கோடு காவல் நிலையத்தில் கொல்லம் பகுதி எஸ்ஐ புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து பலரையும் ஏமாற்றி இலட்ச கணக்கில் பெற்றதும் தெரியவந்தது.
மேலும் ஒருமுறை கொல்லத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ததாக இந்த பெண் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
முன்னதாக இதேபோல் கர்நாடக, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண்கள் சிலர், அரசியல் பிரமுகர்களின் ஹனி டிராப் செய்து லட்சக்கணக்கில், கோடி கணக்கில் பண மோசடி செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!