India
பஞ்சாப் :தொழிற்சாலையில் திடீரென வெளியேறிய விஷவாயு.. 11 தொழிலாளர்கள் பலி.. உடல் நீலமானதால் அதிர்ச்சி !
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா என்ற பகுதியில் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு தயிர், மோர், வெண்ணெய், பால் இனிப்புகள் போன்ற பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் காலை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது காலை 7.15 மணியளவில் தொழிற்சாலையில் இருந்த குளிரூட்டும் கருவியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அதனை சரிசெய்ய பணியாளர்கள் விரைந்த நிலையில், திடீரென அங்கிருந்து விசுவாயு வெளியேறியது. இதனால் சுவாசித்த அந்த பகுதியில் இருந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
மேலும், ஆலையைத் சுற்றியுள்ள 300 மீட்டர் தொலைவுக்கு விஷவாயு பரவியதால் அந்த பகுதியில் இருந்தவர்களும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து போதிய பாதுகாப்புடன் அங்கு விரைந்த மீட்பு குழுவினர் சுற்றுவட்டார பகுதியில் இருந்த பொதுமக்களை வெளியேற்றினர். மேலும், தொழிற்சாலைக்குள் விரைந்து சென்ற மீட்பு குழுவினர் அங்கு 11 தொழிலாளர்களை சடலமாக மீட்டனர். இதில் மூன்று தொழிலாளர்களின் உடல் நீல நிறமாக மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் யாரும் நுழையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?