India
5 வருசமா என்ன செஞ்சீங்க.. ஓட்டுகேட்டு வந்த பா.ஜ.க MLAவை விரட்டி அடித்த தொகுதி மக்கள்!
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹொன்னாளி தொகுதியில் ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ அந்த தொகுதி மக்கள் கேள்விகள் கேட்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹொன்னாளி தொகுதியில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சாரியா ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை சூழ்ந்த கொண்ட தொகுதி மக்கள், "கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள்?. எங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. எந்த ஒரு அடிப்படை திட்டமும் இங்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வில்லை" என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து பா.ஜ.கவினர் அங்கிருந்து தங்கள் பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று தான் பல இடங்களிலும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!