India
15 நிமிடத்தில் ATM-ல் திருடுவது எப்படி?.. 3 மாதம் கோச்சிங் : ATM கொள்ளை வழக்கில் வெளிவந்த பகீர் உண்மை!
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் நகரில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் இருந்து ரூ.39 லட்சம் கொள்ளை சம்பவம் நடந்தது. இகு குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 1000க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒருவீட்டிலிருந்த சிசிடிவி காட்சியில் ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் நீல நிற காரில் ஏறி தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து சுல்தான்பூர் சாலையில் சென்ற நீல நிற காரை மடக்கிப் பிடித்து போலிஸார் விசாரணை செய்தனர்.
அப்போது காரில் இருந்த நான்கு பேர்தான் ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நீரஜ் என்பவர் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பீகாரை சேர்ந்த மிஸ்ரா என்பவர் உத்தர பிரதேச மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடத்தில் ஏடிஎம் எந்திரத்தில் எப்படித் திருடுவது என்று 3 மாதம் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.
இந்த வகுப்பில் சேர்ந்து தான் கைதான நீரஜ் பயிற்சி பெற்றுள்ளார். இந்த பயிற்றி வகுப்பில் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை எப்படி மறைப்பது? எந்திரத்தை ஹேக் செய்வது எப்படி? தொழில் நுட்பங்களை எப்படிப் பயன்படுத்துவது போன்று ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச் சென்று மிஸ்ரா செயல்முறை விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த பயிற்சி முடித்தவர்களை நேரடியாக ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க மிஸ்ரா அனுப்புவார். அப்படி வந்த நீரஜ்தான் ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளையடித்து விட்டு தற்போது போலிஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார். மிஸ்ராவிடம் பயிற்சி பெற்ற கும்பல்தான் கடந்த ஒருவருடத்தில் 30க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!