India
ஒரே மாதத்தில் 3 முறை.. மோடி, யோகி -பழிவாங்க தொடரும் கொலை மிரட்டல்கள்:கேரளாவை தொடர்ந்து உபியிலும் அதிர்வலை
இந்த மாத தொடக்கத்தில் ஊடகத்தின் மெயிலுக்கு விரைவில் பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வதாக மிரட்டல் ஒன்று வந்தது. இதுகுறித்து விசாரிக்கையில் அது 16 வயது பள்ளி மாணவன் செய்தது என்று தெரியவந்தது. இதே சிறுவன் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பல்வேறு திட்டப்பணிகள் தொடங்க பிரதமர் மோடி கேரளாவுக்கு வருகை தருவதை அறிந்து மர்ம நபர் ஒருவர், கேரளா பாஜக தலைவர் அலுவலகத்துக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினார். அந்த கடித்ததில் அவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில் அது பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைக்க, நபர் ஒருவர் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது உ.பி-யில் ஒருவர் உபி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது கடந்த 23-ம் தேதி உபி காவல்துறை அவசர எண்ணான 112-க்கு மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் 'யோகி ஆதித்யநாத்தை நான் சீக்கிரம் கொன்றுவிடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த மொபைல் எண்ணை வைத்து விசாரிக்கையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடையது என்று தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியதில், அவரது மொபைல் போன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணவில்லை என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில் காணாமல்போன போனை அதே பகுதியை சேர்ந்த 19 வயது அமீன் என்ற இளைஞர் திருடி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில், அமீனும், அந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளும் காதலித்து வந்ததாகவும், இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வரவே அவர்கள் அமீனை கண்டித்ததாகவும், அதற்கு பழி வாங்கவே அவரது மொபைல் போனை திருடி கொலை மிரட்டல் மெசேஜை போலீசுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து அமீன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!