India
காதலிப்பதாக கூறி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. உடந்தையாக செயல்பட்ட தோழிகளோடு insta காதலன் அதிரடி கைது !
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியில் வசித்துவருபவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தமிழகத்தின் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை அஜின் சாம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு அந்த மாணவியும் ஒப்புக்கொண்ட நிலையில் அஜின் சாம் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதன்பின்னர் கடந்த 17-ம் தேதி தான் நண்பர்களுடன் களியக்காவிளை வருவதாகவும், இருவரும் வெளியே செல்லலாம் என்றும் அஜின் சாம் அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.
அதன்படி தனது பெண் தோழிகள் ஸ்ருதி, பூர்ணிமா உட்பட 5 பேருடன் களியக்காவிளை வந்த அஜின் சாம் தனது காதலியான அந்த மாணவியை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் இருந்த ஒரு தனியார் விடுதியில் அனைவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அங்கு அஜின் சாம் மற்றும் அந்த 11-ம் வகுப்பு மாணவி மட்டும் தனி அறையில் தங்கியுள்ளனர். அப்போது அஜின் சாம் அந்த மாணவியின் விருப்பம் இல்லாமல் அவரை பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். அதன்பின்னர் அடுத்த நாள் அந்த மாணவியை அவரின் வீட்டில் விட்டுள்ளனர்.
அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் அஜின் சாம் மற்றும் அவரோடு வந்த 5 நண்பர்களை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் இதற்கு முன்னர் இது போன்று சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் சிலரிடம் பணம் பறித்த தகவலும் பெண்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பெண் தோழிகளை அழைத்து சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!