India
இரவில் செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த சிறுமி.. திடீரென வெடித்து சிதறியதால் நேர்ந்த சோகம் !
கேரளா மாநிலம் திரிச்சூர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது பட்டிப்பறம்பு. இங்கு அசோக் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த இவருக்கு 8 வயதில் ஆதித்யா ஶ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் நிலையில், சிறுமியின் தாய் கூட்டுறவு வங்கியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்த சூழலில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுமி தனது வீட்டில் விளையாடி வந்துள்ளார். அதோடு தற்போதுள்ள காலத்தில் வழக்கமாக சிறுவர்கள் மொபைல் போனை பயன்படுத்துவது போல் சிறுமியும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோர்கள் அவரை கண்டித்தும், இந்த பழக்கத்தை விடாமல் இருந்துள்ளார் சிறுமி.
இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுமி இரவு நேரத்தில் தூங்காமல் இருந்துள்ளார். எனவே பெற்றோர்கள் தூங்கிய பிறகு அவர்கள் மொபைல் போனை வைத்து விளையாடி வந்துள்ளார். மேலும் வீடியோவும் பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது நேரம் சுமார் 10.30 மணி இருக்கும். சிறுமி தூங்காமல் மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
சிறுமி தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் அந்த மொபைல் போன் சூடாக ஆகியிருக்கிறது. இதனால் அந்த போன் திடீரென வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி கத்தி உள்ளார். செல்போன் வெடித்த சத்தத்தை கேட்டு உள்ளே இருந்த பெற்றோர் பதறியடித்து வந்து பார்த்துள்ளனர். ஆனால் இதில் கடுமையான காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று தடயவியல் ஆய்வு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவர்களின் மொபைல் போனை அதிக நேரம் கொடுக்க கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தூங்காமல் அதிக நேரம் பயன்படுத்திய வந்த மொபைல் போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!