India
நெருக்கமாக இருக்க வற்புறுத்தல்.. மறுத்த காதலி மேல் சூடான எண்ணெய் ஊற்றிய காதலன்.. ஆந்திராவில் அதிர்ச்சி!
ஆந்திர பிரதேச மாநிலம் ஏலூர் பகுதியை அடுத்துள்ளது துக்கிரால நகர். இங்கு 24 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிடெக் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த சூழலில் இவரும், அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். எனவே இந்த இளம்பெண், அனுதீப்புடன் வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 9-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி கோயிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 10-ம் தேதி அங்கிருந்து ஆந்திராவில் உள்ள Pedavegi என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கே இருவரும் ஒரு இடத்தில் தங்கினர். அப்போது காதலன் அனுதீப் தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் உடலுறுவு கொள்ளுமாறும் காதலன் அனுதீப் வற்புறுத்தியுள்ளது. இதனால் அந்த பெண் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, அவரை அடித்து துன்புறுத்தி அதே வீட்டில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அவர் மீது சூடான எண்ணையை ஊற்றியும் கொடுமை செய்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி அங்கிருந்து நகர முடியாமல் தவித்துள்ளார். சுமார் 10 நாட்களாக மாணவியை அந்த வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்து வந்துள்ளார் காதலன் அனுதீப். இதையடுத்து சரியான நேரம் பார்த்து அந்த பெண் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையம் சென்று காதலன் மீது புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளி அனுதிப்பை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலனை நம்பி சென்ற காதலியை சூடான எண்ணெய் ஊற்றி காதலனே கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!