India
திருமண ஆசையில் ரூ.34 லட்சத்தை இழந்த புதுவை மருத்துவர்.. அமெரிக்க டாக்டர் எனக் கூறி இளம்பெண் மோசடி !
புதுச்சேரி தோட்டக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. 36 வயதுடைய இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் , கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பாலாஜி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த சூழலில் பாலாஜிக்கு 2-வது திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். எனவே பாலாஜியின் தகவல்களை திருமண தகவல் மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து பாலாஜியின் செல்போன் எண்ணுக்கு பலரும் தொடர்ந்து கொண்டு பேசினர்.
அப்போது பாலாஜிக்கு சோமஸ்ரீ நாயக் என்ற ஒரு பெண் ஒருவர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நன்றாக பேசிய அவர், தான் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு, சிரியா நாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், தன்னிடம் அதிகமான பணம் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய பாலாஜி அவரிடம் அப்படியே பேசி பேசி தனது வாட்ஸ் அப் எண்ணையும் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து இருவரும் நட்பாக பேச தொடங்கி திருமணம் செய்வது குறித்தும் பேசி வந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்ட தனது புகைப்படங்களை சோமஸ்ரீ நாயக் பாலாஜிக்கு அனுப்பிய நிலையில், இருவருக்கும் ஒருவருக்கு ஒருவரை பிடித்து போயுள்ளது. எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இந்த நிலையில் சோமஸ்ரீ தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி பாலாஜியிடம் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்தை வாங்கி உள்ளார். அதன்பிறகு திருமணம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை போகவே சோமஸ்ரீ பாலாஜியிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சோமஸ்ரீ மீது பாலாஜிக்கு சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து அவரது டாக்டர் பதிவு எண் (ஐ.டி.) கேட்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மழுப்பி வந்துள்ளார். மேலும் பாலாஜியுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். அவரது எண்ணை தொடர்பு கொண்டால் அது தவறு என்று வந்துள்ளது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை பாலாஜி உணர்ந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அமெரிக்க டாக்டர் என்று கூறி பெண் ஒருவர், ரூ.34 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!