India
மணமகள் வயிற்றில் தையல்.. காரணத்தை கேட்ட மணமனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முதலிரவில் வெளிவந்த உண்மை !
திருமணம் என்பது ஆயிர காலத்து பயிர் என்றெல்லாம் நமது மூதாதையர்கள் கூறி வந்துள்ளனர். எனவே திருமணத்திற்காக தயாராகும் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் பல கனவுகளோடு இருப்பர். இருப்பினும் சில நேரங்களில் அந்த கனவுகள் சுக்கு நூறாக உடைவது போல் பல சம்பவங்கள் ஏற்படும். அப்படி ஒன்றுதான் மத்திய பிரதேசத்தில் உள்ள புது மாப்பிள்ளைக்கு நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது. நிச்சயம் முடிந்த சில நாட்களிலே திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமக்களுக்காக முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புது வாழ்க்கையை தொடங்க எண்ணி பல கனவுகளோடு மாப்பிள்ளை, முதலிரவுக்கு சென்றுள்ளார். அங்கே திடீரென மணப்பெண்ணின் வயிற்று பகுதியில் சிறிது தையல் இருந்துள்ளது. இதனை குறிப்பிட்டு மாப்பிள்ளை, பெண்ணிடம் கேட்கவே, அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். எனவே மாப்பிள்ளை விடாமல் தொடர்ந்து துருவி துருவி மாறி மாறி கேள்விகளை கேட்டார்.
இதனால் வேறு வழியின்றி அதிர்ச்சிகரமான உண்மையை போட்டுடைத்துவிட்டார் மணமகள். அதாவது திருமணம் முடிவதற்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்னதாக மணப்பெண் ஒரு நபரை காதலித்து வந்ததாகவும், அவரால் கர்ப்பமாக ஆனதாகவும், இது பெற்றோருக்கு தெரிய வரவே, அதனை கலைக்க வற்புறுத்தியதாகவும் எனவே அறுவை சிகிச்சை செய்து அதனை கலைத்ததாகவும் கூறினார்.
மேலும் கருவை கலைத்த சில நாட்களிலே ரகசியமாக திருமண ஏற்பாடு செய்து உங்களுடன் திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், மன்னிக்குமாறும் கதறி அழுதுகொண்டே கூறியுள்ளார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததை உணர்ந்த மாப்பிள்ளை இதனை கேட்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதோடு உடனே ஆத்திரப்பட்டு மணமகளை அவரது வீட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
இதனால் பெரும் அதிர்ச்சியில் இருந்த பெண் வீட்டார்கள், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்ததோடு, முறையான நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மேலும் மன வேதனையில் உள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!