India
பலமாக வீசிய காற்று.. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. புதுமனை புகுவிழாவில் விபரீதம்!
புதிதாக சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று இன்றும் பலரது கனவாக இருக்கிறது. இதற்காக வருட கணக்கில் பலரும் உழைத்து வருகின்றனர். இதற்காக பட்ஜெட் பத்மநாபன் படத்தில் பிரபு செய்வது போல், இங்கு அதிகமானோர் இதற்காகவே பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகின்றனர்.
இப்படி சிறுக சிறுக சேகரித்து ஆசையாக வீடு கட்டி அதில் சிலர் குடிபெயர்வர். இவ்வாறு அதனை செய்யும்போது உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுப்பர். அவர்கள் வந்து வீட்டை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூறினால் நமது லட்சியம் பூர்த்தியடைந்ததாக பலரும் எண்ணுவர்.
அந்த வகையில் ஆந்திராவில் இதுபோல் ஒரு புதுமனை புகுவிழா நிகழ்வின்போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் கனுகுமாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பா ரெட்டி. இவர் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து வீடு ஒன்றை கட்டியுள்ளார் எனவே இதன் புதுமனை புகுவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக தங்கள் உறவினர்களையும் அவர்கள் அழைத்துள்ளனர். எனவே இதற்காக வீட்டின் எதிரே பந்தலும் போடப்பட்டிருந்தது.
இந்த சூழலில் திடீரென காற்று வீசியுள்ளது. அப்போது சரிவர போடாத அந்த பந்தல் பறந்து, அது அங்கிருந்த 11 kilovolts மின் வயர் மீது விழுந்துள்ளது. மேலும் அது அப்படியே தொடர்ந்து மின்சாரம் கம்பியில் தாக்க, அந்த கம்பியை பிடித்திருந்த ஒரு இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சிறுவன் கத்தி அலறி கூச்சலிடவே, அவரை காப்பாற்ற பாட்டி முயன்றபோது அவர் மீதும் மின் பாய்ந்துள்ளது.
இப்படி இந்த மின்சாரம் மேலும் 6 பேர் மீது தாக்கியுள்ளது. அந்த 6 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், விரைந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த 6 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீதம் இருந்த 4 பேரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் லக்ஷ்மம்மா (80), அவரது பேரன் விஜய பிரசாந்த், சாந்தகுமாரி (40) லட்சுமணகுமார் (45) ஆகியோர் ஆவர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் புதுமனை புகுவிழாவின் போது பந்தல் பறந்து மின் கம்பியில் உரசி, மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் உட்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!