India
செல்போன் மோகம்.. கண்டித்த பெற்றோர்.. 7-வது மாடியில் இருந்து குதித்த பள்ளி சிறுமி.. மும்பையில் பரபரப்பு !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது மலாடு என்ற பகுதி. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு தம்பதி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 15 வயதுடைய மகள் ஒருவர் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சூழலில் தற்போதுள்ள சிறுவர்கள் மொபைல் போனில் மூழ்கி கிடைப்பதுபோல் அந்த சிறுமியும் மூழ்கி கிடந்துள்ளார். பள்ளி முடிந்ததும் வீடு திரும்பும் இந்த சிறுமி, உடனே மொபைல் போனை எடுத்து விளையாட தொடங்கி விடுவார். இதனால் சிறுமிக்கு படிப்பிலும் கவனம் சிதறியது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை தினந்தோறும் கண்டித்து வந்துள்ளனர்.
அந்த வகையில் சம்பவத்தன்றும் சிறுமி பெற்றோரிடம் மொபைல் போனை எடுத்து விளையாடியுள்ளார். இதனால் கோபப்பட்ட பெற்றோர் அவரது கையில் இருந்த போனை வாங்கி விட்டு திட்டியுள்ளனர். அதோடு படிக்கும் படியும் கூறி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கோபமடைந்த சிறுமி, பெற்றோருடன் சண்டையிட்டுள்ளார். அதோடு வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
சிறுமி ஈட்டை விட்டு சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பெற்றோர் அவரை அங்கும் இங்கும் தேடி அழைந்தனர். அப்போது தான் சிறுமி, அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் இருக்கும் லிபர்டி கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறி, 7-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து கதறி அழுதனர். அந்த இடத்திற்கு வந்த காவல்துறை சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த சிறுமி ஏற்கனவே ஒருமுறை கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் தெரியவந்தது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
செல்போனுக்காக நடந்த சண்டையில் 15 வயது சிறுமி ஒருவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?