India
வீட்டில் வெடிகுண்டு தயாரித்த பாஜக இளைஞர்.. வெடித்து சிதறியதில் நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்வலை !
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் குறிப்பிட்ட பெரும்பாலான எண்ணிக்கையில் பாஜகவை சேர்ந்தவர்களாகவே இருந்து வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சில ரௌடிகள், தங்கள் மேல் உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க உடனடியாக பாஜகவில் இணைந்து கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வழிப்பறி, கொள்ளை, கொலை, திருட்டு, கடத்தல், கஞ்சா விற்பனை என பல கிரிமினல் செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு பாஜக ஒரு அடைக்கலமாக இருப்பதற்காக அதில் சேர்ந்து கொள்கின்றனர். மேலும் பாஜகவின் உயரிய பதவியில் இருக்கும் சிலரும் இதுபோல் குற்றச்செயல்களில் ஈடுபட்டும், உடந்தையாகவும் இருந்து வருகின்றனர்.
அண்மையில் கூட ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவை சேர்ந்த உறுப்பினர், நிர்வாகி, மாவட்ட தலைவர் உள்ளிட்ட பலரும் சிக்கினர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் பாஜகவை சேர்ந்தவர்கள் குண்டு வைப்பது போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் இது அவர்களுக்கு வினையாகவும் முடிந்து விடுகிறது. அதுபோல் ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் விஷ்ணு. 20 வயது இளைஞரான இவர் பாஜகவை சேர்ந்தவர் ஆவர். இந்த சூழலில் இவர் வீட்டில் வைத்து வெடி குண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பார்த்த விதமாக திடீரென அந்த வெடி குண்டு வெடித்துள்ளது. பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரிக்கும்போது, அது வெடித்ததில் இளைஞர் விஷ்ணுவின் உள்ளங்கைகள் முழுவதும் சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் கூட கேரளம் காக்கயங்காடு பகுதியில் பாஜகவைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் தனது வீட்டில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், அவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!