India
14 வகை பாக்டீரியாக்கள்.. மாட்டு கோமியம் குடிச்சா இதான் நிலைமை.. எச்சரிக்கும் இந்திய கால்நடை ஆய்வு !
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி வந்ததில் இருந்தே, இந்துத்துவ சிந்தனைகளை மக்கள் மீது திணிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் முதற்படியாக 'மாடு'. மாட்டை வைத்து அரசியல் செய்வது என்றால் அது பா.ஜ.க. மட்டும்தான். மாட்டை கடவுளாக பாவிக்க வேண்டும், மாட்டு சாணி மருத்துவ குணம் நிறைந்தது, கோமியத்தை குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என பல மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது.
இப்படி இருக்கையில், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமின்றி, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தேச விரோதியாக கருதி வெறுப்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அந்த கும்பலை, பலரும் மதிப்பதே இல்லை. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்து செல்கின்றனர். மாடு சார்ந்த எந்த விஷயங்களையும் அவர்கள் புனிதமாக கருதுவதால், மற்றவர்களை கொடுமை படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மாட்டுக்கறி கொண்டு செல்லும் கும்பலை பிடித்து அடித்து கொடுமையாக தாக்குவது, அவர்களை கொலை செய்வது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மருத்துவ ஆலோசனை என்ற பெயரிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளது பா.ஜ.க. அதாவது மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என எந்த அடிப்படைச் சான்றும் இல்லாத நிலையில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரும் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டிலும் கூட ஹரியானவை சேர்ந்த படித்த கால்நடை மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை சாப்பிட்டு, கோமியத்தை குடிக்கும் வீடியோ வைரலானது. மேலும் அந்த வீடியோவில் மாட்டு சாணத்தை சாப்பிட்டால் நம் உடல், மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமாகும் என்றும் கூறுயுள்ளார். இது போன்ற முட்டாள் தனமான செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்ததோடு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.
அதுமட்டுமின்றி உலகமே கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் கூட மாட்டு சாணம், கோமியம் நம்மை காப்பாற்றும் என்று மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைத்தது பாஜக கும்பல். இது போன்ற விஷயங்களை பாஜகவை சேர்ந்த எம்.பி., எம்.ஏல்.ஏ-க்களே. இது போன்ற முட்டாள் தனமான செயல்களுக்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை இப்படி பரப்புவது மக்கள் உயிருக்கே ஆபத்தில் முடியும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். அதோடு இதற்கு கண்டன குரல்களும் எழுந்தது. இந்த சூழலில் மாட்டின் கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த மாட்டு கோமியம் குறித்து இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் சில பிஎச்.டி மாணவர்கள் கொண்ட குழு ஆய்வு நடத்தியது. அதில் மாட்டு கோமியத்தில் மனிதர்கள் உடல்நலத்துக்கு நல்லது அல்ல என்றும், அதிலிருக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் மனிதர்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் எனவும் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த பாக்டீரியாக்கள் மனித உடலினுள் சென்றால், அது வயிற்றில் தொற்று மற்றும் வேறு சில பிரச்னைகளை உருவாக்கும் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் இனி மாட்டு சாணம், கோமியம் என மனிதர்கள் உண்டால் அவர்களுக்கு எந்த நோய் வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதே நிரூபணம் ஆகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!