India
உ.பி : பசுவை கொன்று இஸ்லாமியர்கள் மேல் பலி சுமத்திய இந்துத்துவ கும்பல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை !
இந்த ஆண்டு இந்துத்துவ கும்பல் நடத்திய ராம நவமி ஊர்வலத்தின் போது உத்தர பிரதேசத்தில் மசூதிக்கு வெளியே இருந்த கடைகளில் ஏறிய சிலர் அங்கு காவி கொடிகளை கட்டி வன்முறையை தூண்டி கலவர சூழலை ஏற்படுத்தினர். அதன்பின்னர் பிஹாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு அதில் பலருக்கு காயம் ஏற்பட்டு ஒருவர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்,இந்த ராமநவமி அன்று தாங்களே பசுவை கொலைசெய்து இஸ்லாமியர்கள் பசுவை கொன்றதாக இந்துத்துவ கும்பல் கலவரத்தை தூண்ட முயற்சி செய்தது தற்போது வெளிவந்துள்ளது. ராமநவமி அன்று இந்து மகாசபை உறுப்பினர்கள் போலீஸாரிடம் இஸ்லாமிய இளைஞர்கள் பசுவை கொலை செய்ததாகவும், அந்த இடத்தில் இருந்து பசு இறைச்சியை எடுத்ததாகவும் புகார் கூறியுள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவுசெய்த போலிஸார் நான்கு இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் அவ்ர்களிடம் விசாரணை நடத்தியபோது இந்த சம்பவத்தை அவர்கள் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், சம்பவம் நடைபெற்றபோது அவர்கள் வேறு இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் இது தொடர்பான விசாரணையை போலிஸார் துரிதப்படுத்தி புகார் அளித்தவர்களில் சிலரது மொபைல் ஜிபிஎஸ் மற்றும் கால் ரெக்கார்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட இடத்தில் அவர்கள் வெகுநேரம் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது இருதரப்பும் இடையே தகராறு ஏற்பட்ட காரணத்தால் இந்து மகாசபை உறுப்பினர்கள் தாங்களே பசுவை கொலைசெய்து இஸ்லாமிய இளைஞர்களை இதில் மாட்டி விட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரை கைது செய்த போலிஸார் மேலும் ஏழு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!