India
பொய் சொல்லி மாட்டிய அதானி.. Hindenburg-ஐ தொடர்ந்து வெளிவந்த அடுத்த அறிக்கை.. விளக்கம் கேட்ட NSE, BSE !
அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 28-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி நிறுவன பங்குகளின் இந்த சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC, உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.அதானியின் நிறுவனங்களில் LIC நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பினர் இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. அதானியின் நிறுவனங்களான அதானி என்டர்ப்ரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது. தற்போது அதானியின் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக இந்த பி.எப் பண முதலீட்டு பணமும் தனது மதிப்பை இழந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களில் முதலாளீடு செய்துள்ள பி.எப் பணத்தை திரும்பபெறவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதானி குழுமம் இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என வெளியாகியுள்ள தகவல் குறித்து தேசிய பங்குச் சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகியவை அதானியிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைந்த நிலையில், அந்த நிறுவனம் தங்கள் கடனை அடைக்க முன்வந்து அடைக்கத்தொடங்கியது.
அதன்பின்னர் கடன்கள் அடைக்கப்பட்டதாக அதானி நிறுவனம் கூறிய நிலையில் அதானி இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என ‘தி கென்’ (The Ken) நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதானி குழுமம் கடன்களில் பாதியை மட்டுமே இதுவரை அடைத்துள்ளதாகவும், அதனால்தான் இன்னும் அந்த நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று ‘தி கென்’ நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தேசிய பங்குச் சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகியவை அதானியிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதானி குழுமம் தனது பங்குகளை அடமானம் வைத்து பெற்ற 21.5 பில்லியன் டாலர் கடனை அடைத்துவிட்டதாக ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிக்கை வெளியாகி அந்த நிறுவனத்தின் உண்மை நிலையை அம்பலப்பகுதியுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!