India

உ.பி : மசூதியின் முன் காவி கொடி கட்டிய இந்துத்துவ கும்பல்.. ராம நவமி ஊர்வலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ராம நவமி ஊர்வலத்தின் போது மசூதிக்கு வெளியே இருந்த கடைகளில் ஏறிய சிலர் அங்கு காவி கொடிகளை கட்டி வன்முறையை தூண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா நகரம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு சிறுபான்மையினர் மீதான வெறுப்பு பேச்சி அதிகரித்து வருகிறது.

தற்போது நாடு முழுக்க ராமநவமி கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மதுராவில் அமைந்துள்ள கியாமண்டி பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலம் சவுக் பஜார் சந்திப்பு பகுதியில் இருந்த ஜமால் மசூதிக்கு அருகே வந்துள்ளது.

மசூதியை பார்த்ததும் ஊர்வலத்தில் இருந்த சிலர் மசூதிக்கு முன்பு இருந்த கடைகளில் அங்கு அங்கு காவி கொடியை கட்டியுள்ளனர். இதனை அந்த பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த பலர் இதுகுறித்து கண்டனங்களை பதிவு செய்ய காவல்நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் (காவ்யா, ஹனி, ராஜேஷ் மற்றும் தீபக் ) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மசூதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: நண்பரை துப்பாக்கியால் சுட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது.. பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்களால் பரபரப்பு !