India

மாலையில் விளையாடிய சிறுமிக்கு காலையில் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமத்தினர் !

சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள போடா தாண்டா என்னும் கிராமத்தில் வசித்துவருபவர் லகாபதி. இவரது மனைவி பசந்த்.

விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், மகள் போடா ஸ்ரபந்தி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை விடுமுறை என்பதால் சிறுமி டோரா தனது நண்பர்களோடு மாலை வரை விளையாடி விட்டு பாடி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு இரவு உறங்கியவருக்கு மறுநாள் காலை கடுமையான மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பாட்டி அவரிடம் வந்தபோது சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று கூறியுள்ளனர். இது சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரி கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த சிறுமி அடுத்த நாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பொய் சொல்லி மாட்டிய அதானி.. Hindenburg-ஐ தொடர்ந்து வெளிவந்த அடுத்த அறிக்கை.. விளக்கம் கேட்ட NSE, BSE !